Category Archives: Vratas

Story of Karadaiyan Nombu in Tamil

கா(ஓ)ரடைய நோன்பும் உருக்காத வெண்ணெய்யும்
14.3.2017 4 to 5 pm (பாம்பு பஞ்சாங்கம் படி)
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.
சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.
மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி.
மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.
சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார்.
அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார்.
எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.
மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.
விரதமுறை:
விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, தரையில் சிறிய கோலமிட வேண்டும். அதன் மீது நுனி வாழை இலை போட்டு, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையின் ஓரத்தில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அதன் முன் அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும்.
பின்னர் நோன்பு சரடை பெண்கள் தாங்களாகவே தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். இறைவியர் படங்களுக்குச் சாற்ற வேண்டும். பிரசாதத்தை அனைவரும் உண்ணலாம். காரடையான் நோன்பன்று பெண்கள் மோர் சாப்பிடக் கூடாது.
மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும்பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம்
தராமி அஹம்!பர்த்து:ஆயுஷ்ய
ஸித்யர்த்தம் ஸுப்ரீதாபவ ஸர்வதா
பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.
அடை செய்யும் முறை
பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள். நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டி இது.
தேவையான பொருட்கள்
வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/4 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது – அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீ ஸ்பூன்
தண்ணீர் 2 கப்
காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் “தள தள’ என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும். வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்கவும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

Advertisements

Karadaiyan nombu

Story of Karadayan Nombu

Savithri was a princess of a rich kingdom in ancient India.She was born as the daughter of King Asrapathi. She was the only child of her parents. When she attained the age of marriage, she told her father that she would herself search for a suitable husband for her.She wished to marry Sathyavan who lived in the forest. Despite being warned by the palace astrologer that he would die within a year of marriage, she married Sathyavan. Days passed and the last day of Satyavan’s life as per the prediction dawned. On that day, Satyavan made Savitri sit under a tree and went to fetch fruits and logs for fuel. After sometime, he returned feeling very tired. Savitri made him lie in a bed made of fresh green leaves keeping his head in her lap. As Satyavan started closing his eyes, there appeared in front of Savitri, a huge figure with a bison as his vahana. Savitri with her dedication and devotion could immediately recognize the figure as Yama, the God of death.
She immediately saluted him and asked him the purpose of his visit. Yama replied that as destined Satyavan’s life span was over and he had come to take his life to the other world. Saying this Yama started walking away with Satyavan’s soul. Savitri left the body of the lifeless Satyavan under the tree and started following Yama. Yama forbade her from following him, saying she could not follow him to the other world, as Yama loka was inaccessible to living beings. Only souls of dead beings are taken there. Savitri insisted on following her husband’s soul. Yama could not stop her from following him. At last, Yama agreed to grant her three wishes on condition that she would go back. She agreed. She asked as the first boon, that her in-laws get back their lost kingdom which Yama granted readily. For the second wish she asked that, as she was the only child of her parents, they get more children. This was also granted by Yama immediately. As the last wish, she asked that she should have many children which also was granted by Yama in his eagerness to get rid of her. Only after granting this wish,  Yama realized that he had been tricked into granting Satyavan life, as a pious and pathivratha (chaste) woman like Savitri cannot have children if Satyavan were to be dead. Yama had to accept his defeat and restore the life of Satyavan. Savitri came back to the tree where she had left the lifeless body of Satyavan. By the blessings of Yama, Satyavan woke up as if from his sleep and Savitri narrated the happenings to him. To offer her gratitude to the Gods, Savitri immediately made a simple neivedyam with available things on hand, Rice & dals and tied the mangala sutra once again as her husband had got back his life. Her offerings were durwa grass and peepal leaves.She performed neivedhyam with wild rice and toor dal. That is kaar arisi and thuvaram paruppu.The preparation is known as Karadai nombu adai – the festival takes its name from the unique Kara Adai dish. It is believed that Savitri cooked such a dish and offered it to Lord Yama along with unmelted butter as a sort of thanksgiving for sparing her husband’s life. This is how Karadaiyan Nombu festival came into existence. I thank Jaishree for sharing this story in her blog. You can find that in the link below.

Source: http://jaishreesblog.blogspot.in/2008/03/karadayan-nombu.html

Click this link for Karadaiyan nombu Sweet adai & salt adai recipes

Story of Karadaiyan Nombu in Tamil

Images of Karadaiyan nombu pooja from Tamil Vratha pooja vidhanam book